சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

28 May, 2022 | 4:57 pm

Colombo (News 1st) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் M.D.R.S. தமிந்த, கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் L.K.W.K. சில்வா குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ்மா அதிபரால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்