by Staff Writer 28-05-2022 | 3:23 PM
Colombo (News 1st) அதிகமாக மின்சாரம் பயன்படுத்துவோரின் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்காக அமைச்சரவை மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகள், கட்டிடங்களின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.