21 ஆவது அரசியலமைப்பு திருத்தம்: கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

by Staff Writer 27-05-2022 | 7:17 PM
Colombo (News 1st) 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் செயலகத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் கட்சியின் சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் கட்சியின் சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, டிலான் பெரேரா, வீரசுமன வீரசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.