வங்கிகளின் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

வங்கிகளின் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

by Staff Writer 27-05-2022 | 3:22 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள், உயர்மட்ட முகாமைத்துவ அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. நிதி அமைச்சின் செயலாளரும் மத்திய வங்கி ஆளுநரும் இதில் கலந்துகொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் நாட்டின் வங்கியியல் அமைப்பு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் விரிவாக கேட்டறிந்து கொண்டுள்ளார். டொலர் பற்றாக்குறை , கடன் விரிவாக்கம், சேமிப்பு போன்ற விடயங்கள் குறித்து வங்கிகளின் தலைவர்களிடம் பிரதமர் கேட்டறிந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா நிலைமை காரணமாக கடன்களைத் திருப்பிச் செலுத்த நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை நீட்டிப்பது குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சமுர்த்தி வங்கி முறையை மத்திய வங்கியின் பூரண கண்காணிப்பின் கீழ் கொண்டு வருமாறு பிரதமர் மத்திய வங்கிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஏனைய செய்திகள்