இலங்கைக்கு உதவ இந்தியாவும் ஜப்பானும் இணக்கம்

இலங்கைக்கு உதவ இந்தியாவும் ஜப்பானும் இணக்கம்

by Staff Writer 27-05-2022 | 3:59 PM
Colombo (News 1st) நெருக்கடியான சூழலில் இலங்கையை மீட்டெடுப்பதற்கான உதவிகளை வழங்க இந்தியாவும் ஜப்பானும் இணங்கியுள்ளன. டோக்கியோ நகரில் இடம்பெற்ற Quad நாடுகளின் உச்சி மாநாட்டையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானின் பிரதமர் Fumio Kishida-விற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களுக்கும் அதிகமாக ஜப்பான் இலங்கைக்கு உதவிகளை வழங்கினாலும் அண்மைக்காலமாக சீனாவின்பால் இலங்கையின் கவனம் திரும்பியமையினால், ஜப்பானின் முதலீடுகளும் உதவிகளும் குறைவடைந்தன. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளால் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு வௌிநாட்டு உதவிகள் அளிக்கும் நாடுகளின் ஒன்றிணைப்பை உருவாக்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளை குறித்த நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.