English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
27 May, 2022 | 5:49 pm
Colombo (News 1st) பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபா உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபா மதிப்பில் 179 ரூபா 86 சதமாக விற்பனையாகிறது.
டீசல் ஒரு லிட்டர் 174 ரூபா 15 சதமாக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டர் 155 ரூபா 56 சதமாக உள்ளது.
இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.
டீசலுக்கு லிட்டருக்கு 56 ரூபா இழப்பை தாம் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை ஆளும் மோசடி கும்பலால் நாடு பெரும் பணவீக்கத்தை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவுடன் 30 சதவீத மலிவான விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை தமது அரசு மேற்கொண்டதாகவும், ஆனால் ஷபாஸ் ஷெரீப் அரசு அதை தொடரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
23 Jul, 2022 | 08:33 PM
16 Jul, 2022 | 04:19 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS