தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் வட மாகாணத்தில் பகிர்ந்தளிப்பு

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் வட மாகாணத்தில் பகிர்ந்தளிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 May, 2022 | 7:41 pm

Colombo (News 1st) பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களுக்காக தமிழக அரசினால் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை வட மாகாணத்தில் இன்று (27) ஆரம்பமானது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நிவாரணப் பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது 15, 857 குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்