அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் இல்லை: பிரதமர் ஊடகப்பிரிவு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் இல்லை: பிரதமர் ஊடகப்பிரிவு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் இல்லை: பிரதமர் ஊடகப்பிரிவு

எழுத்தாளர் Staff Writer

27 May, 2022 | 4:16 pm

 Colombo (News 1st) அரச துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் , கல்வி அமைச்சு தவிர்ந்த ஏனைய அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அத்தியாவசிய சேவையாகக் கருதி, சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர மற்றும் கொடுப்பனவுகளை கடந்த கால முறையிலேயே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச செலவீனங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், அரச ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் S.J.S.சந்திரகுப்த தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்