பூகோள பொருளாதாரம் வீழ்ச்சியடையக்கூடும்

பூகோள பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடையக்கூடும்: உலக வங்கி எதிர்வுகூறல்

by Bella Dalima 26-05-2022 | 3:20 PM
Colombo (News 1st) பூகோள பொருளாதாரம் எதிர்வரும் சில மாதங்களில் பாரிய வீழ்ச்சியை அடையக்கூடும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது. கொரோனா தொற்று, ரஷ்யா - உக்ரைன் மோதலால் ஏற்பட்டுள்ள உணவு, எரிசக்தி, பசளை ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார வீழ்ச்சி நிலை ஏற்படக்கூடும் என உலக வங்கியின் தலைவர் David Malpass தெரிவித்துள்ளார். உலகில் பல நாடுகளில் எரிசக்தி விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளமையானது, பொருளாதார வீழ்ச்சியின் முதலாவது வௌிப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.