by Staff Writer 26-05-2022 | 10:25 AM
Colombo (News 1st) ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 3 சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் 157 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
அதன் பின்னர் இரண்டாவது சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, 01 கிலோ 157 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மற்றும் கொழும்பு - 12 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.