வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் படைத்தளபதிகள்

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் படைத்தளபதிகள்

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் படைத்தளபதிகள்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2022 | 7:14 pm

Colombo (News 1st) மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து மே 9 ஆம் திகதி வரை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் படைத்தளபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.

கடற்படையின் Admiral of the Fleet வசந்த கரன்னாகொட இந்த குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.

ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் விமானப்படையின் Marshal of the Air Force ரொஷான் குணதிலக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையோரிடம் நாளை (27) முதல் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்