அவசரமாக உதவிகள் தேவைப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நட்பு நாடுகளின் உதவிகள் அவசரமாக தேவைப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு 

by Staff Writer 26-05-2022 | 5:34 PM
Colombo (News 1st) தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கை தொடர்பில் தேசிய இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு பாராளுமன்றத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சுற்றுலாத்துறையை முடக்கியுள்ள கொரோனா தொற்றினால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் இது வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து கிடைக்கும் அந்நிய செலாவணியை குறைத்துள்ளதுடன், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையை அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் உதவி அவசரமாக தேவைப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்