by Staff Writer 26-05-2022 | 8:25 AM
Colombo (News 1st) சிறு போகத்திற்கு தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2 வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் D. அபேசிறிவர்தன குறிப்பிட்டார்.
தற்போது நெற்செய்கையை செய்ய முடியாது போனால் மாற்றுப் பயிர்களை பயிரிடுமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் D.அபேசிறிவர்தன, விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.