அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

26 May, 2022 | 8:46 pm

Colombo (News 1st) அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகளைக் குறைத்து திறைசேரி வௌியிட்டுள்ள ஆலோசனையினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய, அடிப்படை சம்பளத்தை மீறாத வகையில், கொடுப்பனவுகளை செலுத்துமாறு வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனையை எதிர்த்து இன்று வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று முற்பகல் 8 மணி தொடக்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

தான்தோன்றித்தனமான கொடுப்பனவை மீளப்பெறுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தினர்.

அரச அச்சகத்தின் உத்தியோகத்தர்கள் பொரளையில் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்