அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது

அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது

அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை: இதுவரை 14 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

26 May, 2022 | 3:30 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரளவின் கொலை தொடர்பில் இதுவரை 14 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் துப்பாக்கியை வைத்திருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவரே குறித்த துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து பொலன்னறுவை நோக்கி கடந்த 09 ஆம் திகதி பயணித்த போது, நிட்டம்புவ பகுதியில் ஏற்பட்ட வன்முறையில், பாராளுமன்ற உறுப்பினரும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

பொலிஸ் சார்ஜன்ட் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், அவரின் துப்பாக்கியும் திருடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்