பஸ் கட்டணம் அதிகரிப்பு

பஸ் கட்டணம் அதிகரிப்பு: குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபா

by Staff Writer 25-05-2022 | 7:25 AM
Colombo (News 1st) நேற்று(24) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 19.5 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார். இதனிடையே, முதலாவது கிலோ மீட்டருக்காக 10 ரூபா விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முச்சக்கர வண்டி சேவை சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, முதலாவது கிலோ மீட்டருக்கான புதிய கட்டணம் 100 ரூபாவாகும்.