அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: 137 பேர் கைது

சட்டவிரோதமாக அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்த 137 பேர் கைது

by Staff Writer 25-05-2022 | 6:43 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் 429 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் விநியோகிக்கப்படும் எரிபொருளை ஒரு சிலர் முறையற்ற வகையில் பெற்று, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மோசடியான முறையில் அதிக எரிபொருளை சேமித்து, அதிக விலையில் விற்பனை செய்வோர் தொடர்பில் 118, 119 அல்லது 1997 ஆகிய துரித தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்வோர், அவற்றை கலப்படம் செய்தே விற்பனை செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்