வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 100 பேர் கைது

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 100 பேர் கைது

by Staff Writer 25-05-2022 | 3:28 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் 33 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 6,808 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 784 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.