நாமலுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை

நாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை

by Staff Writer 25-05-2022 | 6:51 PM
Colombo (News 1st) கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு சென்றிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மீதான இந்த வழக்கு, செப்டம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கோட்டை நீதவான் திலின கமகே இதன்போது உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மன்றுக்கு இன்று அறிவித்தது.