நடிகர் T.ராஜேந்தருக்கு வயிற்றில் இரத்த கசிவு: வௌிநாட்டில் மேலதிக சிகிச்சை

நடிகர் T.ராஜேந்தருக்கு வயிற்றில் இரத்த கசிவு: வௌிநாட்டில் மேலதிக சிகிச்சை

நடிகர் T.ராஜேந்தருக்கு வயிற்றில் இரத்த கசிவு: வௌிநாட்டில் மேலதிக சிகிச்சை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 May, 2022 | 10:29 am

Colombo (News 1st) இந்திய சினிமாவின் பிரபல நடிகர் T.ராஜேந்தர் மேலதிக சிகிச்சைகளுக்காக வௌிநாட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக அவரது மகனும் நடிகருமான சிலம்பரசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமது தந்தைக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியை அடுத்து, தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்த நிலையில் அவரது வயிற்றில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்ததாகவும் அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வௌிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் நடிகர் சிம்புவின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

67 வயதான நடிகர் டி.ராஜேந்தர் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம்(23) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்