English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
25 May, 2022 | 4:47 pm
Colombo (News 1st) அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நாட்டின் சுகாதார துறைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சிறுவர் பராமரிப்பிற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களும், அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்ய தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.
நாட்டிற்கு தேவை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த நன்கொடையை வழங்குவதில் இலங்கை கிரிக்கட் நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் இந்த சவாலான காலகட்டத்தை கடக்க நாட்டிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு நிதி உடனடியாக நன்கொடையாக வழங்கப்படும் என்று SLC இன்று (25) வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடைக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை (24) ஒப்புதல் அளித்துள்ளது.
02 Jul, 2022 | 03:49 PM
28 May, 2022 | 05:16 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS