இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கை 

இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கை 

இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கை 

எழுத்தாளர் Staff Writer

25 May, 2022 | 9:24 am

Colombo (News 1st) போதியளவு பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்குவதற்கு திட்டமிடப்படவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள உலக வங்கி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்தளவிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு புதிய கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கி தயாராவதாக, அண்மைக் காலமாக பல ஊடக அறிக்கைகள் தவறான செய்திகளை வௌியிட்டிருந்ததாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்