இவ்வருடத்தில் இதுவரை 22,419 பேருக்கு டெங்கு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22,419 பேருக்கு டெங்கு

by Staff Writer 24-05-2022 | 4:20 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 4,696 நோயாளர்கள் மே மாதத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். கடந்த வருடத்தில் மொத்தமாக 24,942 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர். திருகோணமலை மாவட்டத்தின் டெங்கு நிலவரம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் A.R.M. தௌபீக் இன்று தௌிவுபடுத்தினார். திருகோணமலை மாவட்டத்தில் 749 டெங்கு நோயாளர்களும் கல்முனையில் 500 பேரும் மட்டக்களப்பில் 587 பேரும் அம்பாறையில் 61 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார். வட மாகாணத்தில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,785 நோயாளிகள் டெங்கு நோயுடன் இணங்காணப்பட்டுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 டெங்கு உயிரிழப்புகள் வடக்கில் பதிவாகியுள்ளதாக மாகாணத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்