by Staff Writer 24-05-2022 | 10:16 AM
Colombo (News 1st) மேலும் இரு கப்பல்களிலிருந்து எரிபொருளை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த இரு கப்பல்களிலும் ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்பன உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.