எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

சிபெட்கோ எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

by Staff Writer 24-05-2022 | 6:01 AM
Colombo (News 1st) இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ⭕ ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 338 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 420 ரூபாவாகும். ⭕ ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 337 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 450 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. ⭕ ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 400 ரூபா வரையிலும் ⭕ சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 445 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுமென எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.