ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு 

by Staff Writer 24-05-2022 | 6:16 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுமார் 05 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். மைனாகோகம மற்றும் கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பான சம்பவம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அதற்கமைய, இன்று (24) முற்பகல் 10 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகினார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு வலியுறுத்தி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக சிலர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கோட்டாகோகமவிலிருந்து இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.