இன்று (24) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 19.5% அதிகரிப்பு 

இன்று (24) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 19.5% அதிகரிப்பு 

இன்று (24) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 19.5% அதிகரிப்பு 

எழுத்தாளர் Staff Writer

24 May, 2022 | 1:57 pm

Colombo (News 1st) இன்று(24) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணம் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைய, பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்தார்.

அதற்கமைய, ஆரம்ப கட்டணம் 32 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று அதிகாலை 3 மணி முதல் எரிபொருள் கட்டணம் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு, தேசிய கட்டண திருத்த கொள்கைக்கு அமைய, பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்ததாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் இரண்டு பிரிவிற்கும் பஸ் கட்டண திருத்தம் அமுலாகும் என அவர் கூறினார்.

இதனிடையே, அரைசொகுசு மற்றும் சொகுசு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்