வௌிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தன நியமனம்

வௌிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தன நியமனம்

வௌிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தன நியமனம்

எழுத்தாளர் Staff Writer

23 May, 2022 | 4:59 pm

Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அருணி விஜேவர்தன, இலங்கை வௌிவிவகார நடவடிக்கைகள் தொடர்பில் 34 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட அலுவலகம், மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பிலிப்பைனுக்கான இலங்கை தூதரகம் ஆகியவற்றிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

ஒஸ்ட்ரியாவிற்கான இலங்கை தூதுவராகவும் வியானாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாகவும் அருணி விஜேவர்தன கடமையாற்றியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பட்டத்தை பெற்றுக்கொண்ட அவர், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றிலும் இளங்கலைமானி பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்