மூன்றாம் தரப்பினரிடமிருந்து எருபொருளை பெற்றுக்கொள்ள வேண்டாம் – அமைச்சர் கஞ்சன

மூன்றாம் தரப்பினரிடமிருந்து எருபொருளை பெற்றுக்கொள்ள வேண்டாம் – அமைச்சர் கஞ்சன

மூன்றாம் தரப்பினரிடமிருந்து எருபொருளை பெற்றுக்கொள்ள வேண்டாம் – அமைச்சர் கஞ்சன

எழுத்தாளர் Staff Writer

23 May, 2022 | 2:46 pm

Colombo (News 1st) மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிலர் எரிபொருளை சேகரித்து அதில் கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் எனவும் அவ்வாறு கலப்படம் செய்து அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்வோர் தொடர்பில் அறிவிக்குமாறும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, தொடர்ச்சியாக நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பல நிரப்பு நிலையங்களில் இன்றும்(23) நீண்ட வரிசைகளிலே மக்கள் காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்