இன்றும்(23) புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

இன்றும்(23) புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 May, 2022 | 11:42 am

Colombo (News 1st) அமைச்சரவை அந்தஸ்துள்ள 08 அமைச்சர்கள் இன்று(23) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், நீர்வழங்கள் அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீர பதவியேற்றுள்ளார்.

கைத்தொழில் அமைச்சராக ரமேஷ் பத்திரன, புத்தசாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கான அமைச்சராக விதுர விக்ரமநாயக்க ஆகியோரும் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சராக நஷீர் அஹமட் பதவியேற்றுள்ளதுடன், நீர்ப்பாசன, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரொஷான் ரணசிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்