அவுஸ்திரேலிய பாராளுமன்றுக்கு தெரிவான இலங்கையின் கெசென்ட்ரா

அவுஸ்திரேலிய பாராளுமன்றுக்கு தெரிவான இலங்கையின் கெசென்ட்ரா

அவுஸ்திரேலிய பாராளுமன்றுக்கு தெரிவான இலங்கையின் கெசென்ட்ரா

எழுத்தாளர் Staff Writer

22 May, 2022 | 9:46 pm

Colombo (News 1st) இலங்கையைச் சேர்ந்த கெசென்ட்ரா (Cassandra Fernando) அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

தொழிற்கட்சியை சேர்ந்த Cassandra Fernando, அவுஸ்திரேலியாவின் ஹோல்ட் தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

Cassandra Fernando, 1999 ஆம் ஆண்டு தனது 11 ஆவது வயதில் குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது இலங்கை பெண்ணாகவும் அவர் பதிவாகியுள்ளார்.

மற்றுமொரு இலங்கையரான ரஞ்ச் பெரேரா, ஹோல்ட் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் Cassandra Fernando-ஐ எதிர்த்து போட்டியிட்டார்.

Cassandra Fernando, 57.5 வீத வாக்குகளைப் பெற்ற அதேவேளை ரஞ்ச் பெரேரா 42.5 வீத வாக்குகளையே பெற்றுக் கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்