மே 23 முதல் ஜூன் 1 வரையான மின்வெட்டு நேர அட்டவணை 

மே 23 முதல் ஜூன் 1 வரையான மின்வெட்டு நேர அட்டவணை 

by Staff Writer 21-05-2022 | 3:38 PM
Colombo (News 1st) இன்றும் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மே 23 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு, நாளையும் (22) எதிர்வரும் மே 29 ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூன் முதலாம் திகதி வரை ஏனைய நாட்களில் மாலை 6.30 க்கு மேல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த தினங்களில் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 வரை பரிட்சை நடைபெறாத நாட்களில், கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடம் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் காலை 8.00 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.