சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் படகுடன் இடைமறிப்பு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் படகுடன் இடைமறிப்பு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் படகுடன் இடைமறிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2022 | 3:58 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் படகுடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பிரிவினரால் இன்று (21) காலை குறித்த படகு இடைமறிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை மற்றும் பொதுவான நடவடிக்கைகளுக்கு அமைய, படகு இடைமறிக்கப்பட்டதாக பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்படும் புகலிடக்கோரிக்கையாளர்களின் படகுகளை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடைமறிக்கப்பட்ட படகில் 15 இலங்கை பிரஜைகள் இருந்தததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன.

கிறிஸ்மஸ் தீவின் மேற்கு கடற்பிராந்தியத்திலேயே இவர்கள் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்