போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் CID வாக்குமூலம் பதிவு

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் CID வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

20 May, 2022 | 5:45 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற அமைதிப்போராட்டங்களில் குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று மாலை 04 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்