பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண கட்சி சாராத அரசாங்கம் சிறந்த பொறிமுறை: டக்ளஸ் தேவானந்தா

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண கட்சி சாராத அரசாங்கம் சிறந்த பொறிமுறை: டக்ளஸ் தேவானந்தா

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண கட்சி சாராத அரசாங்கம் சிறந்த பொறிமுறை: டக்ளஸ் தேவானந்தா

எழுத்தாளர் Staff Writer

20 May, 2022 | 7:24 pm

Colombo (News 1st) பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு கட்சி சாராத அரசாங்கம் சிறந்த பொறிமுறையாக அமையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையினை முழுமையாக அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அதனை பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சி சாராத அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு கோரி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே டக்ளஸ் தேவானந்தா இதனை கூறியுள்ளார்.

மேலும், கட்சி சாராத அரசாங்கத்தினை அமைக்கும் பிரதமரின் முயற்சிகளுக்கு தமது கட்சி பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்