பாராளுமன்ற உணவகத்தை மூடுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

பாராளுமன்ற உணவகத்தை மூடுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

பாராளுமன்ற உணவகத்தை மூடுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2022 | 4:22 pm

Colombo (News 1st) நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத்திலுள்ள உணவகத்தை திறக்கக்கூடாது என இன்று (20) பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

53 பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள், கையொப்பம் இட்டு தமக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, உணவகத்தை மூடிவிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்றத்தைக் கூட்டுவதால் அதிக செலவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்திற்கு பராளுமன்ற உறுப்பினர் S.M. மரிக்கார் மறுப்புத் தெரிவித்தார்.

பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டாலும், அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான பாராளுமன்ற ஊழியர்களுக்காக பணம் செலவிடப்பட வேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்