எரிவாயுவுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன

எரிவாயுவுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன

எரிவாயுவுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2022 | 3:31 pm

Colombo (News 1st) எதிர்வரும் 2 வாரங்களில் எரிவாயுவுடன் மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்தது.

ஓமனிலிருந்து இந்த கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளன.

3500 மெட்ரிக் தொன் எரிவாயு அவற்றில் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதனிடையே, இன்றைய தினம் 50,000 சிலிண்டர்களை சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

35,000 சிலிண்டர்கள் நேற்று (19) விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து சிலிண்டர்களை இறக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது.

எரிவாயு சிலிண்டர்களை இன்று இறக்கும் பட்சத்தில், நாளை முதல் 80,000 சிலிண்டர்கள் வீதம் சந்தைகளுக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் சிலிண்டர்களுடன் அதிகாலை முதல் வரிசையில் காத்திருக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்