இலங்கைக்கு மனிதாபிமான நிதியுதவியாக 3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஜப்பான் தீர்மானம்

இலங்கைக்கு மனிதாபிமான நிதியுதவியாக 3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஜப்பான் தீர்மானம்

இலங்கைக்கு மனிதாபிமான நிதியுதவியாக 3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஜப்பான் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2022 | 4:12 pm

Colombo (News 1st) UNICEF மற்றும் உலக உணவுத் திட்டம் (World Food Programme) மூலம் அத்தியாவசிய மருந்துகள், உணவுப்பொருட்களை இலங்கைக்கு வழங்குவதற்காக  மனிதாபிமான உதவியாக 3 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு மாதங்களில் 25 அத்தியாவசிய மருந்துகளை UNICEF மூலம் பெற்றுக்கொள்வதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படும் என கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய 1.5 மில்லியன் டொலர்கள் மூலம் 15,000 நகர்ப்புற – கிராமப்புற மக்களுக்காகவும் 380,000 பாடசாலை மாணவர்களுக்காகவும் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உட்பட
மூன்று மாதங்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.

இந்த நிதியுதவி, இலங்கை அரசாங்கமும் மக்களும் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை சமாளிக்க உதவும் என ஜப்பான் தூதரகம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்