ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்தது ஐக்கிய மக்கள் சக்தி

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்தது ஐக்கிய மக்கள் சக்தி

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்தது ஐக்கிய மக்கள் சக்தி

எழுத்தாளர் Staff Writer

20 May, 2022 | 4:29 pm

Colombo (News 1st) அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

முன்னதாக, அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது, ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை அல்லவென அவர் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்க்கட்சியுடன் இணைந்து நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவும் அமைச்சுப் பதவிகளை இன்று (20) காலை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்