SL V BAN: முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

இலங்கை - பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

by Bella Dalima 19-05-2022 | 8:50 PM
Colombo (News 1st) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. போட்டியின் இறுதி நாளாகிய இன்று 2 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்களுடன் இலங்கை அதன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. பொறுமையாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். குசல் மென்டிஸ் 48 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டி நிறைவுக்கு வந்தது. நிரோஷன் திக்வெல்ல 61 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். Taijul Islam 4 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 397 ஓட்டங்களையும் பங்களாதேஷ் 465 ஓட்டங்களையும் பெற்றன. போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவானார். இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.