மைத்திரிகம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் சக்தி…

மைத்திரிகம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் சக்தி…

எழுத்தாளர் Staff Writer

19 May, 2022 | 1:49 pm

Colombo (News 1st)  நீண்ட காலமாக நிலையான தீர்வு கிடைக்காமல் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வந்த அனுராதபுரம் – மைத்திரிகம மக்களுக்கான குடிநீர் திட்டத்தை மக்கள் சக்தி இன்று(19) ஆரம்பித்தது.

அனுராதபுரம் – பளுகஸ்வெவ மைத்திரிகம மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை காரணமாக அவர்களில் பலர் தற்போது சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மைத்திரிகம கிராமத்திலுள்ள அனேகமானவர்களின் வாழ்வாதார தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது.

இந்த கிராமத்தில் வாழும் சுமார் 700 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என உறுதிப்படுத்தப்பட்ட நிலத்தடி நீரையே தமது தேவைக்காக பயன்படுத்தி வந்தனர்.

இவர்களுக்கு மாற்று வழிகள் இருக்கவில்லை.

இவர்களது துன்பத்தை எவரும் கவனத்திற்கொள்ளாத காரணத்தினால், இன்று மக்கள் சக்தி குழுவினர் அந்த மக்களை தேடிச் சென்றனர்.

பளுகஸ்வெவ – மைத்திரிகம கிராம மக்களின் துன்பத்தை கண்ட அமெரிக்காவில் வாழும் இலங்கை பெண்மனி ஒருவர் இந்த மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டத்தை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

மக்களின் துன்பத்தை போக்கும் மக்கள் சக்தியின் ஸ்தாபகர் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் ஜனன தினத்தை குறிக்கும் வகையில் இந்த குடிநீர் திட்டத்திற்கான நிர்மாணப் பணிகள் இன்று(19) ஆரம்பிக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்