நாளை (20) அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்காத அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு செல்ல வேண்டியதில்லை

நாளை (20) அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்காத அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு செல்ல வேண்டியதில்லை

நாளை (20) அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்காத அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு செல்ல வேண்டியதில்லை

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2022 | 6:17 pm

Colombo (News 1st) நாளை (20) அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான உத்தியோகத்தர்களைத் தவிர ஏனைய அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமில்லை என உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நிறுவன பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில், அமைச்சின் செயலாளர் J.J.ரத்னசிறியினால் சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, நாட்டில் தற்போது நிலவும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவசர மற்றும் அத்தியாவசிய கடமைகளுக்கு உத்தியோகத்தர்களை அழைக்கும் நிறுவன பிரதானிகளின் முடிவில் இந்த அறிவிப்பு தாக்கம் செலுத்தாது என உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்