ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் 

ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 May, 2022 | 10:51 am

Colombo (News 1st) ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று(19) பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலொன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்