இலங்கை – பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2022 | 8:50 pm

Colombo (News 1st) இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் இறுதி நாளாகிய இன்று 2 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்களுடன் இலங்கை அதன் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது.

பொறுமையாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குசல் மென்டிஸ் 48 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார்.

இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டி நிறைவுக்கு வந்தது.

நிரோஷன் திக்வெல்ல 61 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Taijul Islam 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 397 ஓட்டங்களையும் பங்களாதேஷ் 465 ஓட்டங்களையும் பெற்றன.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவானார்.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்