இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜூன் 6 ஆம் திகதி ஆரம்பம்

இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜூன் 6 ஆம் திகதி ஆரம்பம்

இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜூன் 6 ஆம் திகதி ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2022 | 3:32 pm

Colombo (News 1st) அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் (20) நிறைவடைகின்றது.

இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

பரீட்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்