அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

19 May, 2022 | 3:55 pm

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தையை அடைந்துள்ளது.

அழகியற்கலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த பேரணி ஆரம்பமானது.

‘கோட்டா- ரணில் சதி அரசாங்கத்தை விரட்டுவோம், முறைமையை மாற்றுவோம்’ எனும் தொனிப்பொருளில் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

பேரணி ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் அதனை நிறுத்துமாறு அறிவித்தாலும், மாணவர்கள் அதற்கு இணங்கவில்லை.

இதனிடையே, கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள அரச நிறுவனங்கள், வீடுகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எந்தவொரு வன்முறைச் செயல்களிலும் ஈடுபடுவதற்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதற்கும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் மாணவர்களுக்கு அனுமதி இல்லை என கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்