2 நாட்களுக்கு பெட்ரோல் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – அமைச்சர் கஞ்சன

2 நாட்களுக்கு பெட்ரோல் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – அமைச்சர் கஞ்சன

எழுத்தாளர் Staff Writer

18 May, 2022 | 11:12 am

Colombo (News 1st) பெட்ரோலைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றும்(18) நாளையும்(19) வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், நாடளாவிய ரீதியில் டீசல் தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பெட்ரோல் தட்டுப்பாடு தொடர்பில் இன்று(18) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்