இனவாதத்திற்கு இடமில்லை: ஜனாதிபதி அறிக்கை

இனவாதத்திற்கு இடமில்லை: ஜனாதிபதி அறிக்கை

by Staff Writer 18-05-2022 | 8:16 PM
Colombo (News 1st) தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அறிக்கையொன்றை விடுத்திருந்தார். சமாதானம் மலர்ந்த தாய்நாட்டில் கடும்போக்குவாதம் அல்லது இனவாதத்திற்கு சந்தர்ப்பம் இல்லை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். வரலாற்றில் பல்வேறு சவால்கள் எழுந்தபோதும், தேசப்பற்றாளர்களாக இராணுவ வீரர்கள் முன்னோடிகளாக செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதுள்ள சவால்கள் தொடர்பாக கவனமாகவும் விழிப்புடனும் ஆராய்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு வரலாற்றின் ஊடாக இராணுவ வீரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார, அரசியல் நெருக்கடியை சாதகமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அழுத்தம் பிரயோகிக்க உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு குழுக்கள் முயற்சிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த முயற்சியை ஒன்றிணைந்து தோற்கடிப்பதன் ஊடாகவே வீரமிக்க இராணுவ வீர்கள் நாட்டிற்காக செய்த அர்ப்பணிப்பை பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். 13 ஆவது இராணுவ வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளை சேர்ந்த அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.