by Bella Dalima 18-05-2022 | 5:16 PM
Colombo (News 1st) ரஷ்ய - உக்ரைன் மோதலில் இதுவரை 3700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமானது.
அன்று முதல் இன்று வரையான காலப்பகுதியில் 3,752 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேலும், 4062 பேர் காயமடைந்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் ஷெல், ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் காயமடைந்துள்ளனர்.
ரஷ்ய - உக்ரைன் மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.