English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 May, 2022 | 8:43 pm
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த , மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (18) ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோட்டாகோகம , மைனாகோகம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின் போது பெற்றுக்கொண்ட சாட்சியங்களை பார்க்கும்போது, இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கை நடத்திச்செல்ல முடியும் என தெரிவதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரிதி சொலிசிட்டர் ஜெனரல் ரியாஸ் பாரி மன்றில் தெரிவித்துள்ளார்.
ஆத்திரமூட்டும் வசனங்களை பயன்படுத்தி இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குல் மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக இதுவரை முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம் தெரியவருவதாக சாட்சி விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.
இதேவேளை, நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா , மொரட்டுவை நகர சபையின் ஊழியர் ஆகியோர் கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்கள் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதேவேளை கோட்டாகோகம , மைனாகோகம மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் மேலும் 7 பேர் இன்று குற்றப்புலானாய்வு திணைக்களத்தினால் கைது செய்ய்பட்டுள்ளனர்.
மொரட்டுவை மாநகர மேயர் சமன்லால் , டான் பிரியசாத் ஆகியோரும் அவர்களில் அடங்குகின்றனர்.
30 Jun, 2022 | 05:31 PM
03 Jun, 2022 | 04:33 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS